உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம்

18

அதே ‘குறள்' என்னும் பெயரிலும் கதையிலும் ஒன்றிய கம்பர் இரட்டுறல் அணிவிளங்க,

66

ஆல் அமர்வித்தின் அருங்குறள்”

என்றார். ஆலமரத்தின் விதைச் சிறுமையும் உறுப்புப் பெருமையும்,

66

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே'

என்னும் நறுந்தொகைப் பாட்டும்(17) சென்னை அடையாற்று ஆலமரக் காட்டும் இனிதின் உணர்த்தும்.

குறள் ஈரடி வெண்பா ஆகும். ஆனால் நிரம்பிய ஈரடிகளா அவை. முதலடி நாற்சீர், முடிவடி முச்சீர்! முச்சீரேனும் முழுதுண்டா? இல்லை.

காசு, பிறப்பு வாய் பாட்டின் ‘உ' கரம் அளவு பெறா

நாள், மலர் என்பனவோ அசைச்சீர்

பெயரால் ஏழுசீரும், அளவால் 6 1/2 சீரும் உடை ய குறும் பாட்டு அல்லவோ குறட்பாட்டு

குறளின் ஓரடியின் பெரிதும், மற்றோரடியின் சிறிதும் கோவைப் புலவர்களைத் தூண்டியுள்ளன. அதனால் களவுக் காதலர் இணைந்து நடையிடும் ஈரடித் தடம் போல்வன இவை என உவமை கண்டனர். அவன் காலடியொடு அவள் காலடி தொடர்வதுபோல ஈரடி இயைந்து செல்லலைக் காட்டினர். ஆனால் சிவப்பிரகாசர் அத்தடத்தின் போக்கையும் அமைவையும் நுணுக்கமாக எண்ணி ஓர் அரிய உவமை கண்டார்.

அம்மையப்பனாகக் கோலம் காட்டுபவன் உமை ஒருபாகன். அவன் பெண்ணுரு ஒரு திறன் ஆகியவன். அவன் காலடி பெரிது: அவள் காலடி அவன் காலடியிற் சிறிது! ஒருவனும் ஆகாமல், ஒருத்தியும் ஆகாமல் ‘ஒருவர்' ஆன அவர்தம் ஈரடிகளே இணையடிகளே எம் அடிகளாம் வள்ளுவப் பெருந்தகையின் குறள் அடிகள் எனப் பெருமிதம் கொண்டார். அதனால்.

-