உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

175

நள்ளிரவிற் பெய்யுமழை பயிர்களுக்கு மிக நன்மையாம் எனச் சங்கப் பாட்டென்று சாற்றுகின்றது.ஏரி குளங்கள் வறண்டு போயின:நெற்பயிர் சுருக்கொண்டு வாட்டமாய் நிற்கின்றது: அந் நிலையில் நள்ளிரவில் நல்ல மழை பொழிகின்றது: அம் மழைப் பொழிவு, பிரிந்து சென்ற கணவன் மீண்டும் வந்து தலைவியொடு கூடிய இன்பத்திற்கு ஒப்பானது என்று கூறுகின்றது அது.

நள்ளிரவு அமைதிப் பொழுதே ஆயினும் யாமங்காவலர் உலாவி வருவர்: நாய் குரைத்துத் திரியும்; அன்றிற் பறவை ஒலியெழுப்பிப் பிரிந்தவர்க்குப் பெருந்துயரூட்டும்; சேற்றிலே நின்ற எருமை அதனை வெறுத்து ‘ஐ’ யெனக் கரையும்: வீட்டெலியாகிய உணவைத் தேடும் கூகை குழறும் நள்ளிரவின் நாட்டுக் காட்சிகளுள் சில.

-

வை

மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் பாம்பு இரை தேடும்: ஈயற்புற்றில் இருக்கும் புற்றாஞ் சோற்றைத் தின்னக் கரடி கைந் நீட்டும்: ஆங்குக் குடியிருந்த பாம்பு கரடியின் கைபட்டு அழியும், புற்றின் மேல் இருந்த மின் மினிகள் பறக்கும்; களிற்றிரை தப்பிய புலி கடுக உலவும் இவை காட்டுக் காட்சிகளுள் சில.

-

நள்ளிரவுப் பொழுதில் ஒரு சேவல் கூவுகின்றது: அதனைக் கேட்ட தலைவிக்கு உண்டாகிய சீற்றத்திற்கு அளவே இல்லை. நெடுநாள் பிரிந்து அன்று வந்த தலைவன் அன்பை நெடும் பொழுது பெறாமல், கெடும்படி செய்த சேவலின் கொடுமையை எண்ணிக் குமைந்தாள். “சிவந்த கொண்டையை உடைய சேவலே! இனிய உறக்கத்தில் இருந்த என்னை எழுப்பினை நீ! ஆதலால் நள்ளிரவில் வீட்டு எலியைத் தின்னுதற்குத் திரியும் காட்டுப் பூனையின் குட்டிக்கு இரையாகித் துன்பப் படுவாயாக' என்றாள். தன் இன்பத்திற்கு இடையூறு செய்ததற்காகச் சேவல் இறந்தொழிய வேண்டுமாம்! என்ன கடுமையான சாபம். நள்ளிரவு தந்த வன்மொழி இது! மென் மொழி ஒன்றைக் கேட்போம்!

தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வருகின்றான். அவன் வரும் வழியில் காரிருள் கப்பிக் கிடக்கிறது: கடுமழை பொழிகிறது; காட்டாறு குறுக்கிடுகிறது: களிறு முதலியவை பிளிறித் திரிகின்றன; கரடி முதலிய கடுவிலங்குகள் உலாவு கின்றன; கரடு முரடான வழி அது: ஆதலின் தலைவி தன்