உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்பிரிவு

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

95

இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை,

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை”

என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு.

(980)

ஆடவர் மகளிரோடு கடல் கடந்து ல் கடந்து சென்றால், சென்ற நாட்டி லேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம்.

மடலேறுதல்

உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப்படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந்துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே ‘மடலேறுதல்' என்னும் முறையாயிற்று.

பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும்.

அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும்.

இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை,

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மை யான

என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். “கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” என்பதை இவண் எண்ணலாம் (குறள்.1137).

ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவுமிக்காராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை,