உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சான்றுகள்

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது.

“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்

உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்

சுரநனி இனிய ஆகுக தில்ல;

அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்,

பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’

(ஐங். 371)

“மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம்” என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது

இல்லையா?

தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி,

"இவளே நின்னலது இலளே; யாயும்

குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே;

மாமலை நாட மறவா தீமே!’

என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை!

""இதுநும் ஊரே; யாவரும் கேளிர்;

பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம்

யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே

கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது!

66

இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக” என்னும் இவ்வுரை தாய்மையுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ!

உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டுகின்றதே: "எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர்

நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த

மானும் நடைமெலிந்தாள் வந்து”

(கிளவித்தெளிவு)

தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம்.