உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்

19

அற்றதாம். தலைவன் தலைவியை ‘யாழ' என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது.

இனி இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற்பாக்களுக்குப் பொருந்தவுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்ட ாகின்றதாம். அதனை மேலே காணலாம்.

இனி இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் “அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க.

மேலும்,

"வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவணது எய்த இருதலையும் எய்தும்

நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து

அடுவது போலும் துயர்”

என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது “மும்முதல்” என்ற குறியீட்டால் விளங்கும்.

6

சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால் தான் ‘மும் முதல்' என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம்.

காட்சி

தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். ‘தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது' ஆகலின், 'இவர் தக்காரே’ என இருவரும் எண்ணுதல் ஐயம் ஆகும்; தெளிவும் ஆகும் (1040). இருவர் கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டமையால், அது நெஞ்சக் கலப்பாகிச் சிறக்கும் (1042).

வை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் இயற்கைப் புணர்ச்சி' எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை.

இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்க லாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில்