உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

125

சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138).

சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு 'செம்பொருள்' என்பதாம். “பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் 'சிறப்பென்னும்’ செம்பொருள் காண்ப தறிவு” என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல்.

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பதில்"

என்பது வீடுறு வழியும்,

6

66

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்”

என்பது வீடுபேறுமாம்.

தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற்கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் ‘அறம்' என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம்.

மணிவிழா

து

இனி, 'மணிவிழா' என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற்கொள்வதற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் 'இரண்டாம் திருமணம்' ‘அறுபதாம் கலியாணம்' என்னும் பெயர்களைக் கொள்ளாதாம். 'பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகியமை' அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகிவிட்டதல்லவா!

பொருளியல்

இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், ‘எச்ச இயல்' என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம்.