உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. ‘பாடாண்' என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம்.

தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப்படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் ‘பூப்பு’ எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் ‘அரும்புதல்’ எனவும் வழங்கும் மாறாவழக்குக் கொண்டும் உணரலாம். “மலரினும் மெல்லிது காமம்” என்பதும், “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத்தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத்தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி

பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது,பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, ‘ஆதந்து ஓம்பல்’ என்பார்.வெட்சியின் இலக்கணம்,

"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்"

என்பது (1003).

வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், ‘வேந்து விடு முனைஞர்' என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், ‘ஆதந்து ஓம்பல்' என்றார்.

ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்திவருதல் என்பது விளங்க, ‘ஆதந்து ஓம்பல்' என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக.

66

ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு” என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப் புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். ‘மாடு' என்பது, பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும்