உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

139

உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் ‘எருமை மறம்' எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான்.

எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப்பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது.

ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக் கொழிவே காரணமாம்.

இத்துறையை,

“ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்

கூழை தாங்கிய எருமை

என்கிறார். கூழையாவது பின்னணிப்படை.

தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது,

ரு

“இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்

ஒருவரும் ஒழியாத் தொகைநிலை’

எனப்படுகிறது.

"எவரும் வாழாமல் ஒழிவது தான் வாழப் பிறந்ததன் நோக்கமா?” என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்!

வாகை

வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத்திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல் போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமை யானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது,

“தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப்”

என்பது தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட-மிகுதிப்பட

தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத் திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும்.