உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை ‘இனியர்' வழங்கிய படையலாக்கல் தகும்தானே!

இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப்பெருமை கொண் ாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா?

சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய 'இனப் பிரிவு' என்பது 'மரபியல்' செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர்.

பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை.

புலவர் ஆசிரியர் கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல்,பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார்.

செம்பொருட் சிவம் 'ருத்ரா’ ஆவர். அம்மை ‘அம்பா’ ஆவார். முருகன் ‘சுப்பிரமணியன்' ஆவான்; (சுப்பிரமணியன் பிராமணனுக்கு நன்மை செய்பவன்)

-

முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானையையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை!

விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கட மை செய்தல் வேண்டும்!

அஃதறம்! அந்தண்மை!

ஆனால், ‘விழித்தலே ஆகாது’ எனத் திட்டமிட்டுத் ‘தமிழே தீட்டு’ ‘தமிழினம் தீண்டக் கூடாத இனம்' என்று கண்மூடித் தனத்தைக் கால மெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட்படாத