உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

207

ஆ ண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு

வந்தவையா?

எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங்காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை- பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப்பிக்கலாம். நடைமுறை ஆகுமா?

L

இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ!

மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆகவேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆகவேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந் துள்ளமை கண்கூட ம் அல்லவோ!

இனி, இடையொட்டுப் போகக் கடை யொட்டையும் விட்டுவிட

வில்லை.

நூலின் மரபாக,

“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை

மரபுவழிப் பட்ட சொல்லி னான

"மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்

“வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட் டாக லான

"மரபுநிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல்

முதலும் வழியுமென நுதலிய நெறியின”

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்*