உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்' எனப்படும்.

மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில்

பலன் எனப்படுகின்றது.

பலன் இல்லா நெல்லும்

பயன் இல்லாச் சொல்லும்

ஒத்தவை என்பதால் ‘சொல்' என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது.

“பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி எனல்”

என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம்.

என்ன?

சொல்லதிகார முதலியலின் பெயர் 'கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது

ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை' என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல்போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக்கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது.

கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல்.

இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பலஎன்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன.

வேற்றுமை

ம்

அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு,பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன.

வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக

விரிகின்றது.