100
துண்டம் துள்ளம்:
துண்டம்
துள்ளம்
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
துண்டு துண்டாக அமைந்தது துண்டம் ஆகும்.
துண்டத்தின் இடை இடையே அமைந்த சிறு வட்டங்கள் துள்ளம் எனப்படும்.
ஒருவர் நிலப்பரப்பில் ஒரு பகுதி துண்டம் அல்லது துண்டு என்று அழைக்கப்படும். அத்துண்டின் ஊடே சில பகுதி களிலுள்ள பயிர்கள் கருகியோ வாடியோ போயிருந்தால் துள்ளம் துள்ளமாக கருகியோ வாடியோ போயிருப்பதாக வழக்காறு.
துளி, துள்ளி, துள்ளம் என்பவை ஒரு பொருளன. துளியின் சிறுமை மழைத் துளியால் தெரியவரும்.
துண்டு துணுக்கு:
துண்டு துணுக்கு
ஒன்றைத் துண்டித்தது துண்டு.
ஒன்றைத் துண்டித்ததைப் பலவாகத் துண்டித்தது.
துண்டு என்பது துண்டிக்கப்பட்டதாம். துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் துண்டிக்கப்பட்டவையே. கூட்டத்தில் இருந்து ஒன்றை ஒதுக்குதல் துண்டித்தலாகச் சொல்லப்படுவதை அறிக. சின்னஞ்சிறு செய்திகள் துணுக்கு என இந்நாள் பெருக வழங்குதல் நினைவு கூரத்தக்கது.
துணிமணி
துணி
மணி
ஆடை அல்லது உடைவகை. அணிகல வகை.
துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் ஒரு பொருளன. பாவில் இருந்து துணிக்கப்படுவதால் துணி ஆயிற்றாம். துணி என்பது உடுப்பனவற்றையெல்லாம் தழுவி நின்றது. அது போல மணி என்பது அணிவனவற்றையெல்லாம் தழுவி நின்றது.
மணிவகை ஒன்பது; இக்கால் அவ்வொவ்வொன்றின் போலிமையும், புத்தாக்கமானவையும் எண்ணற்றுள. அவற்றால் அமைக்கப் பெற்ற அணி கலங்கள் எல்லாம் மணி என்னும் சொல்லுள் அடக்கமே. மணவிழாவுக்குத் துணி மணி" எடுக்காதவர் எவர்?
66