உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

105

அறிந்ததே. தோடு-தொகுதி, கூட்டம். தோப்பு-தொகுப்பு. "தோட்டமும் தோப்பும் எங்களுக்கு உண்டு" என்பது வளமைப் பேச்சு.

தோப்பு கூப்பு

தோப்பு

கூப்பு

திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு வகை மரங்களோ பல வகை மரங்களோ உடைய தொகுப்பு.

திட்டமிடுதல் இல்லாமல் இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக்காடு.

தொகுப்பு என்பது தோப்பு ஆயிற்றாம், பகுப்பது ‘பாத்தி’ யாவது போல. கூப்பு என்பது குவிப்பு என்பதிலிருந்து வந்ததாம். குவி, குவிதல், குவிப்பு, குமி, குமிதல், குமிப்பு என்பவற்றையும் கருதுக. "தோப்புக் காடும் கூப்புக் காடும்" என்பது வழக்கு.

தோலான் துருத்தியான்

தோலான் ஊ துலைத் துருத்தியின் தோற்பைபோல் பின்னே வருபவன்.

துருத்தியான்- துருத்தியின் மூக்குப் போல முன்னே வருபவன்.

66

ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்றுவந்தால், நீ என்ன அவனுக்குத் தோலான துருத்தியானா?” என்று வினாவுவது உண்டு. நீவராதே என்று தடுக்கும் தடையாக வரும் வினா இதுவாம்.

ஊதுலையில் அமைந்த தோல் துருத்தி அமைப்பைத் தழுவியது இவ்விணை மொழியாம்.

தோலான் துருத்தியான் எல்லாம் கேட்பான்.

நக்கல் நரகல்

நக்கல் நரகல்

66

நகையாடுஞ் சொல்

அருவருப்பான சொல்

நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே” என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல்- நகைத்தல்; நக்கல் என்பதும் அது வேடிக்கை விளையாட்டு, கேலி கிண்டல் என்று சொல்பவை நக்கலாம். இடக்கரடக்கு முதலாம் இழிந்த