உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

நண்டும் சிண்டும்

நண்டு

சிண்டு

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

ஓடி ஆடித் திரியும் பிள்ளைகள்.

ஓடி ஆடித் திரியாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் திரியும் பிள்ளைகள்.

நண்டும் சிண்டுமாகத் திரிகின்றன. நண்டுஞ்சிண்டுமாகப் பல பிள்ளைகள் என்பன வழக்குகள். சிண்டு, சுண்டு எனவும் வழங்கும். நண்டு, சிண்டு என்பவை பெரிய நண்டு, நண்டுக் குஞ்சு என்பவற்றைச் சுட்டி, அத்தகு குழந்தைகளைக் குறிப்பதாயிற்றாம். சிண்டு, சுண்டு என்பவை சிறியது என்னும் பொருள் தரும் சொற்கள். சிறுகுடுமியைச் சிண்டு என்பதையும், சிறுகாயைச் சுண்டைக் காய் என்பதையும் கருதுக. சுண்டைக்காயைச் சுரைக்காய் ஆக்கிவிட்டானே" என்பதும் விளக்கும்.

நத்தம்

நத்தம் புறம்போக்கு

நத்தம்

புறம்போக்கு

66

வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிலம். ஊர்க்குப் பொதுவாம் மந்தை.

ஆடுமாடு மேய்தற்கென அரசு ஒதுக்கிய புல்நிலம்.

ஊர் மாடு, ஆடு முதலியவை நத்தத்தில் தங்கும். நாய்களும் நத்தத்தில் திரியும். நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?என்பது பழமொழி.

புறம்போக்கு - மேய்ச்சல் நிலம் எனவும் வழங்கப்படும்.

நத்தம் ஊரடி சார்ந்தது; புறம்போக்கு - ஊர் நில புலங்களை யெல்லாம் தாண்டிய ஆறு குளம் ஓடை முதலியவை. நத்தல் நறுங்கல்

நத்தல் நறுங்கல்

தின்னுதற்கு வாயலந்த குழந்தை

சவலைப் பிள்ளை அல்லது நோயால் நறுங்கிப் போன பிள்ளை.

நத்துதல் ஆர்வப்படுதல், நறுங்குதல் வளர்ச்சியின்றி இருத்தல். இத்தகுகுழந்தைகள் பெற்றோர்க்கு ஓயாத தொல்லை தந்து கொண்டே இருக்கும். அழுகையும் அரற்றுமாக இருக்கும். நத்தல் நறுங்கலை வைத்துக் கொண்டு எப்படி எல்லாவற்றையும் நேரம் காலத்தில் முடிக்க முடியும் என ஏங்குவார் பலர்.