உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

நோய்வழிச் சொற்களே. ‘நொ' என்பதும் நோய் என்னும் பாருள் தருவதே. 'நொடித்துப் போய்விட்டார்” என்பது வறுமைப் பட்டுவிட்டார்' என்பதைக் குறிப்பதால் நொடி வறுமைப் பொருள் தருதல் புலப்படும். ஆழ்ந்த பள்ளம் நொடிப் பள்ளம் எனப்படுவதால் வறுமையின் அளவீடு வெளிப்படும். “நோய் நொடியில்லாமல் வாழ்க” என்பதொரு வாழ்த்து வகை. பங்குபாகம் பங்கு

பாகம்

கையிருப்பு தவசம் முதலியவற்றைப் பிரித்தல்.

வீடு மனைநிலபுலம் முதலியவற்றைப் பிரித்தல். சொத்து நிலை பொருள் என்றும் அலை பொருள் என்றும் இருவகையாம். பங்கு, அலை பொருள்பற்றியது; பாகம், நிலை பொருள் பற்றியது. இவை தாவரசங்கமம்' என்று வடமொழியிலும்,அசையாப் பொருள், அசையும் பொருள் என்று தமிழிலும் வழங்கப்படும்.

பிள்ளைகளுக்குத் தந்தை பங்குபாகம் வைத்துத் தருவது

வழக்கம்.

பச்சை பசப்பு

பச்சை

பசப்பு

வளமை அல்லது பசுமை

ஏய்ப்பு, அல்லது ஒப்பிதம்.

'பச்சைபசப்புக் காரன் என்று ஏய்ப்பவரைக் குறிப்பர். தம் பசுமையைக் காட்டி ஏய்ப்பாரும், இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏய்ப்பாரும் என அவர் இருவகையர். அவர் தன்மையை இவ்விணைச் சொல்லால் சுட்டினாராம்.

பசப்புதல் - ஏய்த்தல் என்னும் பொருளில் இன்றும் வழங்கு கின்றது. பச்சை இப்பொழுது பசையாக வழங்குகின்றது. பசையானவன் என்றால் வளமானவன் என்பதாம்.

பச்சை பதவல்

பச்சை பதவல்

சிறிதும் காயாத ஈரம் உடையது.

சற்றே காய்ந்து ஈரப்பதமுடையது.