122
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
ஆண்பிள்ளையைக் குறித்து நின்றதாம். அது குழந்தை என்பது
போன்றதாம்.
பிள்ளை கொள்ளி
பிள்ளை
கொள்ளி
66
ஆண் பிள்ளை
கொள்ளிக் கட்டை தீ
பிள்ளை கொள்ளி இல்லை” என்பதொரு வசை. எவருக்கோ ஆண் பிள்ளைப் பேறு இல்லை என்றால், பின்னே வருவதையும் கூட்டி பிள்ளை கொள்ளி இல்லை என்பர். எவனோ கொள்ளி வைக்கத்தானே செய்வான்? இருந்தாலும் அவன் இல்லையாம்! அதனால் இவ்வாறு பழிப்பர்.
மகன்
“கொள்ளிக்குப் பிள்ளை என்று தவிப்பார் சிலர். அப்பிள்ளை கொள்ளிக் கட்டை யாகவோ, கொள்ளிவாய் பேயாகவோ இருந்தாலும் கவலை இல்லை! கொள்ளி முடிவான் எனத் திட்டிக் கொண்டிருக்கத் திரிந்தாலும் கொள்ளி வைக்க அவனொருவன் வேண்டுமாம்!
பீடும் பெயரும்
பீடு
பெயர்
பெருமிதமான செய்கை
பெருமிதச் செய்கை செய்தான் பெயர்
பீடும் பெயரும் எழுதி வழி தோறும் நாட்டப்பட்டிருந்த கற்களைச் சுட்டுகிறது சங்கப் பாட்டு. போர்க்களத்தில் பெருமிதம் காட்டுதலையே பீடாகக் கருதி அவர்க்குக் கல்லெடுத்து அவர் பெருமைச் செயலையும் பெயரையும் எழுதி வைத்து வழிபாடு செய்தல் வழக்கம். ‘அமரில்' இறந்தார் அமரர் எனப்பட்டார். அவரே தெய்வம் எனவும்பட்டார்.
'பீடு பெற நில்' என்பது அறவுரை. பிறர்க்குத் தாழாப் பெருநிலை பீடு என்பதாம். பெயர் என்பதே பேராகிப் புகழும் ஆயிற்றாம். பெயர் பெறுவதினும் பீடு பெறுவது தனிச் சிறப்பினதாம்.
புல் பூண்டு
புல்
- நிலத்தைப் புல்லிக் கிடப்பவை(தழுவிக் கிடப்பவை)