உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

வயிற்றுக் குழந்தைக்கு உணவாவாளும் அவள்; இரு குழந்தை களுக்கும் உடலில் ஊட்டம் வேண்டுமே 'ஊட்டுவதற்கு' என்னும் பரிவு தந்த பரிசு 'வாயும் வயிறுமாம்.

வாலும் தோலும்

வால்

தோல்

கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு.

வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல்

வால் முன்னே வரும்; தோல் பின்னே வரும். வால் பத்தலை அடைந்ததும் தோல் நீரைக் கொட்டும். வால் வரவும் தோல் வரவும் நிகழ்ச்சி ஒன்றையொன்று தழுவி நிகழும். அதுபோல் இணைந்து பேசி செயல்படுவாரை 'வாலும் தோலும்' என்பது உண்டு. ஒருவருக்கு ஒருவர் ஏற்றுப் பேச வந்தால் நீ என்ன அவனுக்கு " வாலா? தோலா?" என வினாவுவதும் வழக்கம். வேறு; வகையாக வாலைக் கண்டாயா? தோலைக் கண்டாயா? என்பதும் வழக்காம்.

விட்டக் குறை தொட்டக்குறை

விட்டக்குறை

முன்னைப் பிறவியில் செய்யாமல் விட்ட குறைவினை.

தொட்டக்குறை- இப்பிறவியில்

இப்பிறவியில் எடுத்து

முடிக்காமல் விட்ட

குறைவினை.

ஒருவன் பிறவியைத் தீர்மானிப்பது 'விட்டக் குறை தொட்டக்குறை’ என்பது இந்திய நாட்டுக் கொள்கை. குறை நீக்கமே வீடுபேறு என்று சொல்லப்படும். சிலர் இளமையிலேயே பெருநிலைப் பேற்றாளராகத் திகழ்வர். அன்னவரை விட்டகுறை தொட்ட குறையால் வந்தவர். குறை முடிந்து நிறைவாகிவிட்ட பெருநிலை இது” எனப் பாராட்டுவர்.

66

விப்பு வெடிப்பு

விப்பு வெடிப்பு

- நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.

மண் கல் முதலியவை பிளந்து காணல்.

விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’ சிறியது; மெல்லியது; கோடு போல்வது.

வெடிப்போ ஆழம் அகலம் நீளம் எல்லாமும் அகன்ற பிளப்பு.