தானம் தவம்
தானம்
—
இணைச்சொல் அகராதி
151
கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்– தானம் என அதன் தோற்றமே,
'வாள் தந்தனனே தலை எனக்கீய’
6
என்னும் தலைக் கொடையாளி குமணனை நினைவூட்டும். தவம் என்பது ‘தவ்’ என்னும் வேர் வழியது தவ்-சுருக்கம்
உண்டி, உடை, உறைவு எல்லாம் எளிமையதாய் தேவையைச் சுருக்குவதாய், சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம்.
தானம் தவம் இரண்டும் தங்கா, வானம் வழங்காதெனின் என்பது வள்ளுவம். (குறள் 29)
திண்டாட்டம் கொண்டாட்டம்
திண்டு- திண்ணை. சோற்றுக்கோ, வேறு பிச்சை (இரவல்) பெறுதற்கோ வறியவர், செல்வர் வீட்டு முகப்பில் உள்ள திண்டுகளில் ஏறி நின்று தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும். இது வறுமைப் து பாட்டில் நிகழ்வது.
-
L
கோயிலுக்குக் காவடி கொண்டு செல்வதைக் காண்கிறோம். தோளில், தலையில், கைகளில், தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் கொண்டாட்டம் ஆகும். இஃது அன்பு மேலீட்டாலும், இறையுணர்வு மேம்பாட்டாலும், போர்க்கள வீறு முதலிய பெருமிதத்தாலும் உண்டாவதாம்.
ஊரவையில் ஒருவர்க்கு நேர்ந்ததையெல்லாம் கூறுதல் மன்றாட்டு ஆகும். கோயிலில் - இறை- மன்றாட்டும் உண்டு. துச்சு குச்சு
துச்சு சிறியதும் வீட்டை ஒட்டிக் கூரை வேய்ந்ததுமாம் குடியிருப்பு துச்சு ஆகும். ‘துச்சில்' என்பது வள்ளுவம்.
குச்சு குச்சிகளைக் கால்களாக நாட்டி, குச்சிகளை வரிச்சுகளாகவும் முகடாகவும் பரப்பி வைக்கோல், கீற்று, கோரை தழை, என்பவை பரப்பப்பட்ட சிறிய குடிசை குச்சு.