இலக்கிய வகை அகராதி
161
செவியறுவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பவை துறையளவில் தோன்றிச் சிற்றிலக்கியமாக வளர்ந்ததே யன்றோ.
சிரியர் தொல்காப்பியர்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எய்தச் சொன்ன பக்கமும்.’
என்று கூறும் நூற்பாவின் நான்கடி, ‘துறை' யளவிலோ ஒழிந் தது? பத்துப் பாட்டில் செம்பாதியைப் பறித்துக் கொண்டு நூலுருப் பெற்றுவிட்டதே!.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறு
பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப் படை (ப (மலைபடுகடாம்) என்பவை தொல்காப்பியம் தந்த சிற்றிலக்கிய வகைமையே யல்லவோ!
'பதிற்றுப்பத்து' என்பது என்ன தந்தது? பத்தைத் (பதிகத்தை) தந்தது; நூற்றையும் (சதகத்தையும்) தந்தது! அம் மட்டோ? ஈறுமுதலாக (அந்தாதியாக) வரும் சிற்றிலக்கிய வகைத் தோற்றத்தை நான்காம் பத்து நவில்கின்றதே! ஐங்குறுநூறும் (18) அந்தாதிக்கும் பத்துக்கும் சான்றாகின்றதே.
6
தமிழுக்குத் தனிச் சிறப்பாம் அகப்பொருளின் முப் பொருள் வழியேயும், திணை துறைகளின் வழியேயும், புறப் பொருள் திணை துறைகளின் வழியேயும் 'யாப்பியல் வழியேயும்’ எண்ணற்ற சிற்றிலக்கியங்கள் எழுந்துள்ளமையைப் பயில அறியலாம்.
இறையாண்மைகொண்ட அரசன் வழியாகவும், இறைவ னாம் முழுமுதல்வன் ஈடிலா அன்பில் ஈடுபட்டுப் பாடிய அடியார் பாடல்கள் வழியாகவும், எழுந்த இத்தொகுப்பளவில் அடங்கிவிடக்கூடியவையன்றாம். இனிச் சிற்றிலக்கியப் பரப்பு வகையை ஒரு பகுப்பு வகையில் பார்க்கலாம். வகைக்குக் காட்டப் படுவன, எடுத்துக்காட்டாம் அளவே! முழுத் தொகுப்பு அன்றாம்.