உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

இவ்வாறே இவற்றையெல்லாம் பெருக்கிக் கொள்ளவும், விரித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

இலக்கிய வகை அகரவரிசையில் இடம் பெற்றுள்ளவை, உரிய அளவால் விளக்கப் பெற்றுள. நூற்பாக்களும் வேண்டு மிடத்துத் தரப்பெற்றுள. எடுத்துக்காட்டுகளும் இயம்பப் பெற்றுள.

விரித்துக் கூறவேண்டியவை விரித்தும், சுருக்கிச் சொல்ல வேண்டியவை சுருக்கியும் சொல்லப்பட்டுள. பெயரளவானே சுட்டப் பெறுவனவும் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு ஓரளவு விளக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.

சிற்றிலக்கியங்கள் காலவகையில் பிற்படத் தனி நூலுருக் கொண்டவை, ஆதலால் ‘வடமொழியாட்சி' பெயரில் மிக்குள. அவையெல்லாம் அடைப்புக் குறிக்குள் தமிழாக்கஞ் செய்யப் பெற்றுள. அவற்றுள் விடுபெற்றனவும் இருக்க வாயப்பு உண்டு. தமிழாட்சி போற்றப் பெறுமாயின், வடமொழிப்பெயர் தானே படிப்படியே மறைய வாய்ப்பாம். தமிழாக்கத்தில் மேலும் திருந்த டமானவை இருக்கலாம். பயிலப் பயிலவே புத்தாக்கச் சொற்கள் பொலிவுறும் வண்ணத்தை அடையும் என்பது வெளிப்படும் உண்மையாம்.

இலக்கிய வகைமை ஆய்வு 1972-ல் தொடங்கப் பெற்றது. அதன் வேண்டுகை அப்பணி நிறைவித்து 1976-ல் வெளிப்பட்டது. நூல் வெளியீடோ 1985 இறுதியில் ஆகின்றது. இதனை வரு விருந்தாய் ஏற்று வனப்புற வெளிப்படுத்தும் மெய்யன்பர் மணி வாசகர் பதிப்பக உறுதுணையர் பேராசிரியர் ச.மெய்யப்பனார்.

மெய்யப்பர் சிற்றிலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூலாய்வு நூல்களும் நிரம்ப வெளியிட்ட பேற்றாளர். கழக மேனாள் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சு. அவர்கள் தமிழ்ப்பணியில் தம் மனத்தைப் பறி கொடுத்து நெஞ்சாரப் பாராட்டுபவர். அவர்கள் பணியைத் தம் முன்னோட்டப் பணியாகக் கொண்டு அவ்வகையில் நூல் வெளியிட முகிழ்ப்பவர். என் கெழுதகை அன்புக்கும், நண்புக்கும் உரிமை பூண்டவர். அன்னார் இந் நூலை வெளியிடும் ஆர்வத்தில் தளிர்த்துக் கடனாற்றியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.