இலக்கியவகை அகராதி
அக்கரமாலை (எழுத்துமாலை)
அகரமுதலாகிய ஒழுங்கில், மொழிக்கு முதலாக வரும் எழுத்துகளுக்கெல்லாம் பாடல் அமைந்தது ‘அக்கரமாலை' எனப் பெறும்.
அக்கரம் - எழுத்து; இவண், மொழிக்கு முதலாக வரும் எழுத்துகளைக் குறித்து.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவை அக்கரமாலை
முறையில் அமைந்தவை.
‘அருணாசல அக்கரமாலை' இணைக்குறட்டாழிசையால் அமைந்துள்ளது.
வருக்கக்கோவை, வருக்கமாலை காண்க. அகப்பொருட்கோவை
அகப்பொருள் துறைகளை ஓர் ஒழுங்குறுத்திக்கோத்த அமைப்புடையது இக்கோவையாகும்.
கோக்கப்பட்டவையெல்லாம் பொதுவாகக் 'கோவை' எனத்தக்கனவே எனினும், அவை ஆசாரக்கோவை, வருக்கக் கோவை, ஞானக்கோவை எனப்படுவதன்றிக் 'கோவை' என்ற அளவில் குறிக்கப்படுவன அல்ல. அவ்வாறு குறிக்கப்படுவது அகப்பொருட்கோவையே. 'கோவை' காண்க.
அகலக்கவி (பாவிகம்)
பொருட்டொடர் நிலையாய் விரிவுறச் செய்யும் பெரு நூல்கள் அகலக்கவி எனப்படும். பெருங்காப்பியம், காப்பியம், புராணம் (தொன்மம்) என்பவற்றைக் காண்க.
6
நால்வகைக் கவிஞருள் ‘வித்தார கவி' எனப் பெறு வானால் இயற்றப்படும் பெருநூலே அகலக் கவியாம்.