உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

அரிபிறப்பு

உற்பவ மாலை காண்க.

அலங்கார சட்கம் (அறுமணியணி)

வெண்பா, கட்டளைக்கலித்துறை, எழுசீர் ஆசிரிய விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், சந்தக்கவி, ஆசிரியம் என்னும் அறுவகைப் பாடல்களும் முறையே அமைந்து வரப் பெறும் ஆறன் அடுக்குநூல் அலங்கார சட்கம் எனப்பெறும்.

சட்கம்

-

ஆறு; வண்ணச்சரபம் தண்டபாணி அடிக ளாரால் பாடப்பெற்ற, 'திருநெல்வேலி திருப்பணி ஆறுமுக நயினார் அலங்கார சட்கம்' 36 பாடல்களால் அமைந்த நூலாகும். இதனை ‘அறுமணி' என்று கூறுவது உண்டு என்பது, விருதை சிவஞானயோகிகள் இயற்றிய 'நாகேசர் அறுமணி' என்னும் நூலால் விளங்கும்.

அலங்கார பஞ்சகம் (அணி ஐந்தகம்)

வெண்பாவும், கலித்துறையும், ஆசிரியப்பாவும், ஆசிரிய விருத்தமும், வண்ணமும் என்னும் ஐந்தும் மாறிமாறி அந்தாதி யாக வரப்பாடுதல் அலங்கார பஞ்சகம் எனப் பெறும் (பஞ்சகம் - ஐந்துடையது)

“ வெண்பா கலித்துறை வேறாசிரியம் விருத்தம் – வண்ணம் பண்பால் வருவ அலங்கார பஞ்சகமாம்.

66

“ வெண்பா அகவல் கலித்துறை அகவல் விருத்தம் சந்த விருத்தமிவ் வகையே மாறி மாறியந் தாதித் தொடையாய்ப் பாடுவ தலங்கார பஞ்சக மாகும்.'

அலங்காரம் (அழகுநூறு)

(நவநீதப் பாட்டியல். 42)

(முத்துவீரியம். 1108)

அழகுறுத்திப் பாடப்பெறும் நூறு கட்டளைக்கலித் துறைப் பாடல்களைக் கொண்டது அலங்காரமாம்.

பழனித்திருவாயிரத்தில் வரும் ‘அலங்காரம்' காண்க. இதனை இயற்றிய தண்டபாணியடிகள் இயற்றியனவே வேல் அலங்காரம், மயிலலங்காரம், ஆறெழுத்தலங்காரம், வாளலங்