192
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
இலகிரி (களிப்புப் பேரலை)
தேன் சுவை போன்றதாம் இனிய பொருளைக் குறிக்கும் இலகிரி, இனிய பாக்களால் ஆகிய நூலைக் குறித்து வந்தது. சங்கரரின் ‘சௌந்தரிய லகரி' வீரை கவிராயரால் மொழி பெயர்க்கப்பட்டது இவ்வகை நூலின் முன்னோடி.
து
வள்ளலாரின் ‘சல்லாபலகரி’, தண்டபாணி அடிகளின் 'முருகானந்த லகரி' ஆகியவை தொடர்ந்தவை.
‘லகரி’, யை அலை' யெனக் கொண்டு பெயர்க்கப் பட்டமை வாலம் அம்மையாரின் ‘அழகின் அலை' (சௌந்தர்ய லகரி) என்பதால் விளங்கும்.
லட்சுமி விலாசம் (திருப்பேறு)
கன்னி ஒருத்தியின் திருமணத்தைக் கவினோடு நடத்தி வைக்கத் திருமாலும், திருமகளும் ஒருங்கு வந்ததாகப் பாடுதல் இலட்சுமி விலாசமாம்.
“பெண்ணை, மணங்கூட்ட மாலொடுபொன் வந்ததாப்
பாடல், அணைலட் சுமிவிலா சம்
லாலி (இன்சொல்)
(பிரபந்தத்திரட்டு. 3)
இலாலி என்னும் சொல் இடம்பெறப் பாடப்படும் மங்கலப் பாடல் ‘இலாலி' எனப்படுகின்றது.
திருமணத்தின் மங்கலப் பாடலாகப் பாடப்படும் இலாலி இறைவனைப் பாடுதற்கும் பொருளாயிற்று. இசைப்பாடல் வடிவிலும் இலாலி இயல்வதுண்டு.
இலீலை (திருவிளையாடல்)
தெய்வத் திருவிளையாடல் பற்றிக் கூறுவதாக அமைந்தது லையாம். இவ்வகையில் புகழ்வாய்ந்தது பிரபுலிங்க லீலை, தியாகராச லீலை என்பன.
இலீலை பல்வேறு கதைக் குறிப்புகளைக் கொண்டு நட ப்ப தால் பல்வேறு யாப்பமைதியமைந்த பாடல்களைக் கொண் டுள்ளது.