உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உந்தி பறத்தல்

இலக்கிய வகை அகராதி

195

உந்து, உந்துதல், உந்துவண்டி, உந்துபந்து இன்னவெல் லாம் இக்கால ஆட்சிச் சொற்கள். இவற்றின் மூலவைப்பு ‘உந்தி பறத்தல்’ ‘உந்தீபற' என்பவற்றில் உள.

பெரியாழ்வார் பாடிய உந்தி பறத்தல் ‘பாடிப்பற' என்னும் முடிவுடையது. ஆயின், ‘உந்திப் பறந்த ஒளியிழையார்கள் சொல்’ எனவரும் பதிக இறுதிப்பாடல் உந்தி பறத்தலைத் தருவதுடன், ஒளியிழையார் உரிமையையும் தருகின்றது. கலித்தாழிசையால் அமைந்தது ஆழ்வார் பாடல்

66

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் வகைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்(கு) அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற. -அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.'

இனி வேறொரு வகைக்கலித் தாழிசையால் வருகின்றது மணி மொழியாரின் திருவுந்தியார். அதில் ஒரு பாடல்:

66

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற

ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.”

'உந்திபற' ஏன் ‘உந்தீபற’ என்றானது 'காவிரி’ காவிரி’ இசைக்காகக்

‘காவேரி' யாகவில்லையா?

இவ்வுந்திப் பனுவல் உந்தி வளர்ந்ததால் சோமசுந்தர நாயகரின் சித்தாந்த உந்தியார் நூற்று மூன்று பாடல்களை யுடையதாயிற்று.

உயிர் வருக்கமாலை (உயிரினமாலை)

அகரமுதல் அஃகேனம் ஈறாக அமைந்துள்ள பதின் மூன்றெழுத்துகளுக்கும் ஒவ்வொரு பாடலாக அமைந்த சிறு நூல் உயிர்வருக்க மாலையாகும்.

இவ்வகையில் எழுந்த ஒருநூல் “மதுரை மீனாட்சியம்மை உயிர்வருக்கமாலை' என்பதாம்.