இலக்கிய வகை அகராதி
203
கோயில்களில் திரு ஊசல், திருப்பொன்னூசல் என விழாக்கள் எடுப்பது வழக்கு. இறைமையில் தோய்ந்த அடியார்கள் இவ் வகையில் பாடி மகிழ்ந்துள்ளனர். மணிமொழிப் பெருந்தகை பாடியது திருப்பொன்னூசல்.
திருவரன்குளத்தீசர் திருவூசல் என்பது ஆவணப்பெரும் புலவர் வேலாயுதனார் இயற்றியது. அதில் முதற்பாட்டு:
66
அருளாட அருளம்மை அப்ப ராட
அருள்நிறைந்த பெரியோர்கள் களிப்புற் றாடப் பொருளாடப் புவனமெலாம் செழித்தே ஆடப் புண்ணியமும் புகழறமும் தழைத்தே ஆடத் தெருளாடு ஞானமெலாம் கதிப்புற் றாடச் செந்தமிழும் பாவலருஞ் சிறப்புற் றாட மருளாடு மக்கள்மனம் மகிழ்ந்தே ஆட மாட்சிமிகும் அரன்குளத்தீர் ஆடீர் ஊசல்.
இவ்வூசல் 36 பாடல்களையுடையது.
66
அகவல் விருத்தம் கலித்தாழிசையால்
பொலிதரும் கிளையொடும் புகலுவ தூசல்
என்று ஊசல் இலக்கணம் கூறும் இலக்கணவிளக்கப் பாட்டியல்
(85).
ஊசல் கலித்தாழிசையால் வரும் என்பார் நவநீதப்
உ
பாட்டியலார் (50).
66
அகவல் விருத்தத் தானா குதல்கலித்
தாழிசை யானா னாகுதல் சுற்றத்
தோடும் பொலிக ஆடீர் ஊசல் ஆடாமோ ஊசல் ஊசலாகும்.”
என்பது முத்துவீரியம் (1122).
ஊடல்மாலை
ஊடுதல், ஊடுதல் நிமித்தம், ஊடல் நீக்கம் ஆகியவை வ பற்றிய இலக்கியம் ஊடல் மாலை என்பது.