இலக்கிய வகை அகராதி
211
வீட்டுச் சண்டை, தெருச்சண்டை, சமயப்போர், கட்சிப் போர், நாட்டுப்போர் எனப் பெருகியும், பெருக்கியும் வரும் உலகியல், ஏசல் நூலின்மூலம் எனல் கருதத்தக்கதாம்.
‘வள்ளி தெய்வானை ஏசல்.
பலவூர்களுக்கு உண்டு.
பாவநாசம் இறைவன் வயிராசநாயகருக்கும் உலகமை நாயகிக்கும் நடந்த ஏசலைக் கூறும் 'ஏசற்பிரபந்தத்தில்' ஒரு செய்தி:
66
"குற்றமொன்றும் செய்யாக் கொலைவேடர் கோன் விழியைப் பற்றிப் பிடுங்கியது பாவமன்றோ?"
என்பது அம்மை ‘குற்றச் சாற்று’
66
கொற்றமுறும்,
மாவலியைக் காவலிடை வைத்துகந்து நன்றி கொன்ற பாவமெவர் செய்வார் பணிமொழியே?"
என்பது ஐயன் ‘மாற்றுச் சாற்று.’
ஏசியவர் ஏசிக்கொண்டே இருப்பின் என்னாம்?
66
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
ரு
―
(திருக்குறள். 1330)
என்பதுபோல், இவ்வேசலும் இறுதியில் 'இருமையிலா ஒருமை' எய்துதலோடு நிறைவுறும்.
66
' நீரும் குளிர்ச்சியும்போல் நீங்காக் குணகுணியாய்ச் சீரொன்றும் சத்தி சிவகாமி.”
விளங்கும் காட்சியைக் கூறுகிறது பாவநாசம் ஏசற் பிரபந்தம்.
கலிவெண்பா'வினால் ஏசல் நூல் இயலும். அகவல் நடையிடுவதும் உண்டு.
ஏற்றப்பாட்டு
ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை' என்பது பழ மொழி. 'மூங்கில் இலைமேலே' எனத்தொடங்கும் ஏற்றப்