இலக்கிய வகை அகராதி
215
கலிப்பாவிற்குரிய ஆறு உறுப்புகளுள் வண்ணகமோ எண்ணோ இரண்டுமோ குறையினும் ஒருபோகு என்பதேயாம்.
கலி உறுப்புகள் மயங்கியும் மிக்கும் குறைந்தும் வரினும் கொச்சக ஒருபோகு என்று கூறுவர்.
ஒருபோகு தேவர்களைப் பாடுதலால் தேவபாணி எனவும் பெறும்; அது திருமாலுக்குரியதாம். மற்றும் சிவபெருமானுக்கும் முருகனுக்கும் உரித்தாகவும் கூறுவர்.
வேந்தன் அறச்செயல், குடிநிலை, அறிவுத்திறம் ஆ கிய வற்றை வாழ்த்துதலும் ஒரு போகியற்கை என்பர்.
66
66
66
66
தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை ஒழித்திரு வகையுள் ஒன்றால் கடவுட் பழிச்சும் ஒருபோ கிருமூன் றுறுப்பும் அமைந்தொரு கியலும் நயந்திகழ் கலியுள் வண்ணகம் போதினும் எண்ணே போதினும் ஓதிய உறுப்பாற் பேர்புகன் றனரே.”
வரன்முறை பிறழ உறுப்பு மயங்கி மிக்கும் குறைந்தும் வருவது கொச்சக
ஒருபோ காமென உரைத்தனர் புலவர்.
தேவபாணி தெரியுங் காலை
—
(பன்னிருப் பாட்டியல். 206,207)
மாசறு துழாய்முடி மலைந்த சென்னி நீர்நிலம் அளந்த நெடியோன் மேற்றே."
சுடர்கதிர்த் திங்கள் சூடியோற்கும் படர்திரைப் பனிக்கடல் மாதடிந் தோற்கும் உரிய காலமும் உளவென மொழிப.'
வேந்தன் வேண்டும் நெறிசெய் தாலும் வாய்ந்த மதியும் மரபும் வாழ்த்தலும் விதியென மொழிப மெய்ந்நெறிப் புலவர்.”
―
(பன்னிருப் பாட்டியல். 210-212)