218
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
சிவபெருமான் மேல் ஒன்பது கூற்றிருக்கை பாடியவர் தண்டபாணி அடிகள்.
ஒரெழுத்தந்தாதி (ஓரெழுத்து முடிமுதல்)
ஓ ரெழுத்தே செய்யுண் முழுமையும் வந்து அந்தாதித் தொடையால் அமையும் நூல் ஓரெழுத்தந்தாதியாகும். ஓரெழுத் தந்தாதி குற்றுயிரான் வந்த மடக்கு, நெட்டுயிரான் வந்த மடக்கு, ஒருமெய்யான் வந்த மடக்கு என்று பகுக்கப்படும்.
கருப்பையா பாவலர் என்பார் ஓரெழுத்தந்தாதி நூல் ஒன்று யாத்துள்ளமையைத் தமிழ்ப்புலவர் அகராதி வெளிப் படுத்துகின்றது (பக். 100).. திருச்சுழியல் ஓரெழுத்தந்தாதி, கழுகு மலை ஓரெழுத்தந்தாதி என்பவை இவ்வகைய. (தனிச் செய்யுட் சிந்தாமணி 346)
(எ.டு:)
66
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.
-(தண்டி.45 மேற்)
இது தகர எழுத்தொன்றான் வந்த செய்யுள். ‘ஒரு வருக்கப்பா’
பார்க்க.
கட்டளைக் கலிப்பா
சங்கச் சான்றோர்க்கு முற்பட்டோர் கட்டளை அடியால் செய்யுள் செய்தலை வழக்காகக் கொண்டிருந்தனர். தொல் காப்பியர் கூறும் அடிகளுக்குரிய எழுத்து எண்ணிக்கை அதனை வெளிப்படுத்தும். அதனை வெளிப்படையாக விளக்குவது போல அமைந்தது ‘கட்டளை’ என்னும் சொல்லாட்சி.
கட்டளைக் கலித்துறை என்பது நேரசையில் தொடங்கும் அடிக்குப் பதினாறு எழுத்தையும் நிரையசையில் தொடங்கும் அடிக்குப் பதினேழெழுத்தையும் கொண்டிருக்கும். இக் கட்டளைக் கலிப்பா, ஓரடியை இரண்டு அரையாகவும் அரை யடியை நாற்சீரளவினதாகவும் அவ்வரையடி நேரில் தொடங்கின்