240
66
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்."
―
(பன்னிருப் பாட்டியல். 248)
கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாவால் அமைந்தவை என்பது கருதத்தக்கது; கீழ்க்கணக்கு நூல்கள்:
66
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
குடைவிருத்தம் (குடைப்பா)
வேந்தர் வெண்கொற்றக் குடையைக் குறித்து ஆசிரிய விருத்தம் பத்துப் பாடுவது குடைவிருத்தமாகும்.
- (நவநீதப் பாட்டியல். 41)
குடைவிருத்தம் போன்றவற்றைத் “தானை பெற்ற தலைமை யோரையன்றி ஏனை முன்னோரைச் சொல்லுதலும் உண்டு” என்று இப்பாட்டியல் கூறும்.
குதிரை விருத்தம் (குதிரைப்பா)
குதிரையைப்பற்றி ஆசிரிய விருத்தம் பத்துப்பாடுவது குதிரை விருத்தம் ஆகும்.
(நவநீதப் பாட்டியல். 41)
குதிரையைப் பற்றி வெண்பாவினால் பாடப்படின் அது குதிரைப்பா, எனப்படும் என்று கூறும் பிரபந்தத் திரட்டு (1: 15).
கும்மி
வண் ளையான் அமைந்த ஓரெதுகையுடை ய எழு சீர்க்கழிநெடிலடிகள் இரண்டுவரப் பாடப்பெறும் பாடல் களைக் கொண்டது கும்மி என்பதாகும். பலபேர் கூடிநின்று ஆடிப்பாடுதலால் கும்மி என்று பெயர் பெற்றது. கும்பல், கும்மிருட்டு, குப்பல், குப்பை முதலிய, 'தொகுதி குறிக்கும் சொற்கள்” பல உளவாதல் அறிக.