246
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
குறத்தியை மலைவளம் முதலிய வினாவல் குறத்தி நிலவளம் மலைவளம் கூறல் தலைவன் குலவளம் நிலவளம் சாற்றல் குலமகள் குறத்தியைக் குறிதேற வினாவல் குறத்தி தெய்வம் பராவலங் குறி தேர்ந்து நல்வரவு நவிலல் தலைவிபொருள் நல்குதல் குறவன் வரவு புள்வரவு கூறுதல் கண்ணி குத்தல் கான்பறவை படுத்தல் குறத்தியைத் தேடல் குறவன் பாங்கனோடு
குறத்தி குறிகூறல் குறத்தியைக் கண்ணுறல் குறவன் குறத்தியை ஐயுற்று வினாவால்
வினாவிற் குறுவிடை குறத்தி விடுதல்
இவ்வகை உறுப்பெலாம் இயையப் பொருந்திக் கலித்துறை அகவல் கழிநெடில் விருத்தம் கலிவிருத்தம் வெண்பா தரவு கொச்சகம் பதமுதல் சிந்து பாடுதல் பண்பே.’
குறவஞ்சி வகையுள் ஞானக்குறவஞ்சி என்பதொரு வகை. அது சிங்கன் சிங்கி உரையாகச் செல்லும் என்பது பீருமுகம்மது அருளிச் செய்த ஞானரத்தினக் குறவஞ்சியால் விளங்கும்.
குறம்
66
ஆதிக்கு முன்னம் அநாதியும் என்னடி சிங்கி! அஃது,
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா!
ஆதியாய் வந்த அரும்பொருள் ஏதடி சிங்கி - அது சோதியில் ஆதி சொரூபாய் எழுந்தது சிங்கா!”
இக்குறவஞ்சி 63 கண்ணிகளையுடையது.
குறம் என்பது குறி சொல்லுதல் என்னும் பொருளது. பாட்டுடைத் தலைவனைக் காமுற்ற தலைவி ஒருத்தியைக் கண்டு குறத்தி குறிகூறுவதாக வருவது குறமாகும்.
குறம் என்னும் நூலில் குறத்தியின் கூற்று மட்டுமே வரும். ஆனால், குறவஞ்சி என்னும் நூலில் குறத்தி கூற்றுடன் பிறர் பிறர் கூற்றும் பிற பிற செய்திகளும் உண்டாம்.