உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

தலும், சிந்துப்பாவால் பாடப்பெறுவது ‘குறியறி சிந்து' என்னும் பெயர்பெறும்.

"குறியகவல் நாடுபிற சேறல் குறியறி சிந்து.'

என்பது பிரபந்தத்திரட்டு (17).

குறுந்தொகை

“குறளடிச் செய்யுள் குறுந்தொகை யாமே"

என்பது குறுந்தொகை இலக்கணம் (பிரபந்ததீபம் 53).

குறளடி என்பது நான்குமுதல் ஆறெழுத்துள்ள நாற்சீரடி என்பது தொல்காப்பிய நெறி. ஆயின் அந்நெறி சங்கத்தார் காலத்திற்குப் பின்னே போற்றப்பெறவில்லை. ‘இருசீரடிகுறளடி எனச் சீரெண்ணிக்கை கொண்டு அடி அளவிடப்படுவதாயிற்று. ஆகலின் குறளடி அல்லது இரு சீரடி கொண்டு பாடப்பட்ட நூல்வகை குறுந்தொகை எனப்பட்டதாம்.

“அறஞ்செய விரும்பு."

66

ஆறுவது சினம்.'

என்பனபோல இயல்வனவும் குறளடி. வஞ்சிப்பா நடையினவும்

இக்குறுந்தொகையாவதாம்.

தொகை

இனிச் சங்கத்தார் குறுந்தொகை என்னும் நூலோ, நெடுந்தொகை என்னும் அகநானூற்றடியளவை நோக்கக் குறுந்தொகை ஆயிற்றாம். 'ஐங்குறுநூறு' என்பதும் அத்தகையதே.

கூடல்மாலை

கூடல் - கூட்டம் - புணர்ச்சி - கலவி கலவி இன்னவெலாம் ஒரு பொருள். மகளொருத்தி தானே விரும்பி வந்து தலைவனைக் கூடுதல் கூடல்மாலைப் பெயரமைந்த நூற் பொருளாம்.

"மான்வலிய மேவவரல்கூடல் மாலையாம்"

(பிரபந்தத்திரட்டு 8)

மான்-மான்போலும் மங்கை.