254
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
என்னே! என்னே!' என்னும் ஆங்கிலத் தேர்ச்சியர், கண் ணோட்டம், கன்னித் தமிழ்க் கண்ணீர்க் குறையுளாம் கையறு நிலைப்பாடலின் பக்கம் கண்ணோட்டம் கொண்டுகூடக் கண் ணோட விடுவது இல்லை என்பதும் ஒரு கையறு நிலையே.
கொம்பில்லா வெண்பா அந்தாதி
கொம்பு எழுத்து வாராமல் பாடப்படுவதொரு வெண்பா அந்தாதி இது. கொம்பு ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என்பவை. இவ்வெழுத்துகள் பாடலில் இடம் பெறாவண்ணம் பாடப்படுவதாயிற்று. இது, ஒலியமைதி நோக்கிய பனுவல் பிரிவாம். இதழகல்பா, இதழ் குவிபா என்பன போல் கொள்க. ‘திருச்சுழியல் கொம்பில்லா வெண்பாவந்தாதி’ இவ்
வகைக்கு எடுத்துக்காட்டாம்.
கோபப் பிரசாதம் (காய்வருள்)
சினமும், அருளும் ஆகிய இருவகை முரணியல்களையும் இறைவன், நெறியுறச் செய்தமையை மாறிமாறிவர உரைப்ப தொரு நூல்வகை ‘கோபப் பிரசாதம்' எனப்படுகின்றது. காய்தலும் அருளலும் ஆகிய இது, காய்வருளாம்.
பிரசாதம் என்பது அருட்கொடையாம். இந்நூலின் உட் கிடைப்பொருளை,
66
இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர் என்றறிய உலகின்
முன்னே உரைப்பதில்லை.”
எனவரும் நக்கீர தேவநாயனார் இயற்றிய கோபப்பிரசாத அடிகள் விளக்கும். இந்நூல் 100 அடிகளைக் கொண்ட இணைக் குறளாசிரியப்பாவால் அமைந்ததாகும்.
அண்ட வாணனுக் காழியன் றருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்."
என நூல் தொடக்கத்திலேயே அருளலும், ஒறுத்தலும் இருத்தல் கண்டு கொள்க.