உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

கோயிலொழுகு போல்வதொரு நூல் ‘சீதளப் புத்தகம்’ என்பது. ‘சீர்தளம்' என்பது சீதளமாயிற்று. திருக்கோயில் என்பது அதன் பொருள். திருக்கோயில் திருப்பணி, கோயில் நடைமுறை பற்றிய செய்திகளைக் கூறும் நூலே "சீதளப் புத்தக மாம்’; மதுரைத் திருக்கோயில் திருப்பணிகளைக் குறிக்கும் ‘சீதள நூல்' உண்டு.

திருப்பணி மாலை என்பதொரு நூலும் கோயில் திருப்பணி பற்றியதே. ‘மதுரைத் திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை' என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பாண்டியர்கள் திருப்பணி தொடங்கி நாயக்க மன்னர் கள் காலம் வரை நிகழ்ந்த திருப்பணிகளை எடுத்துரைக்கும் திருப்பணிமாலை, நல்ல பெண் என்பாள் செய்த திருப்பணியை,

66

மண்ணிலுள் ளோர்களும் யாவரும் போற்று மதுரைச் சொக்கர்க் கண்ணிய சந்நிதி வாசலி லேநல் லழகு பெறத்

திண்ணிய பேரருள் நந்தீ சரைப்பிர திட்டை செய்தாள்

பெண்ணினி னல்லபெண் னென்றே பெயர்மிகப் பெற்றவளே.”

என்கின்றது. இதன் பாடல்கள் பெரும்பாலனவும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. சிதைவின்றிக் கிடைத்துள்ள பாடல்கள் நூற்று ஆறாம்.

கோவை

எடுக்கவோ கோக்கவோ' என்னும் துரியன் நயத்தகு நாகரிக வினவல் நாடறிந்த செய்தி.

கோக்கப்பட்டது யாது? அது, கோவை என்க.

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலமைந்த அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத் திணையும் கற்பொழுக்கத் திணையும் கூறுதலை எல்லையாகக்கொண்டு கட்ட கலித்துறை நானூறாகத் திணைமுதலாகத் துறையீறாகிய பன் னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றி வரப்பாடுவது அகப் பொருட்கோவை எனப்படும் கோவையாகும்.

ளைக்

“யாவையும் பாடிக் கோவைபாடுக” என்னும் முன் மொழி, கோவையின் அருமையை உணர்த்தும். ‘பாவை பாடிய வாயால்