உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

தொல்காப்பியனார் கூறும் அகப்பொருட் கூற்றுவகை களே இக்கோவைப் பனுவலுக்குக் கொடைவள வைப்பகமாம். கோவைக்கு எடுத்துக்காட்டுத் ‘திரு வைக் கூட்டுக.

அகப்பொருட்கோவை பார்க்க.

கோவைச் சதகம் (கோவை நூறு)

முடிமுதல் தொடை

யைபுற, நூறு

பாடல்களால்

அமைந்த நூல் கோவைச்சதகமாகும். கோவை என்னும் சொல் லாட்சியால், அகப்பொருட் கோவைக்குரிய கட்டளைக் கலித் துறைப்பாவான் இயல்வது என்பது விளங்கும்.

நெல்லை மாவட்டம் சார்ந்த வடகரைக் குறுநில மன்னர்மேல் புலவர் பெரியசாமி என்பவரால் இயற்றப்பட்ட 'கோவைச்சதகம்' எடுத்துக்காட்டாம்.

சக்கரமாற்று

ஒன்றன் பெயர்களையெல்லாம் முறையே கூறிச் சக்கரச் சுழற்சிபோல அவை அடுத்தடுத்துத் தலைமை பெறுமாறு பாடுதல் சக்கரமாற்று எனப்படுகிறது. இவ்வகையில் திருச்சக்கர மாற்றாகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று விளங்கு கின்றது. அது சீர்காழிப் பதிகமாகும்.

“பிரமனூர் வேணுபுரம் புகலிவெங்குருப் பெருநீர்த் தோணி

புரமன்னு பூந்தராய் பொன்னுஞ் சிரபுரம் புறவஞ்சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிடங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவு மூரே.”

இது பதிக முதற்பாடல், பின்னர் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம் எனப்பத்துப் பெயர்கள் பத்துப்பாடல்களிலும் முன்னாக விளங்கச் சக்கரமுறையில் சுழல்வதால் இப்பெயர் பெற்றதாம். இச்சக்கரமாற்றிலேயே அவ்வூர்க்கு அவராலேயே மேலு மொரு பதிகமும் பாடப் பெற்றுள்ளது. அது விளங்கிய சீர்ப் பிரமனூர் என்று தொடங்குகின்றது.