260
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
“கலிப்பாவும் தாழிசையும் நான்மணிமேற் காட்டல் நலத்துறுச டானன நற்பா.
என்பது பிரபந்தத் திரட்டு (13)
நான்மணிமாலை காண்க.
சண்டை
வ
தலைவன் நாடு, ஊர், சிறப்பு, ஆயவற்றைக் கூறி, வஞ்சினம் கூறல், போர்புரிதல், களக்காட்சி முதலியவற்றை விரித்துக்கூறல் சண்டை என்னும் நூற் பொருளாகும். 'பாஞ்சாலங்குறிச்சிச் சண்டை' பட்டிதொட்டியெல்லாம் நாட்டுபாடலாக விளங்கு கின்றது. கற்றறியார்க்கும் பயன்படுமாறு 'சண்டை எழுந்தனவாம்.
சத்தகம் (எழுமணி)
-
நூல்கள்
ஏழுபாடல்களையுடைய தொல் நூல்வகை சத்தகம் - ஒரே வகைப் பாடலால் பாடுதல் என்பது விதி. (சப்த சத்த- ஏழு) ‘சட்கம்’ காண்க.
சதகப்பதிகம் (நூறுகள் பத்து)
சதகங்கள் பத்தினையுடையதும் ஆயிரம் பாடல்களைக் கொண்டதுமாகிய சதகப்பதிகம்.
சதகப்பதிகம், தண்டபாணி அடிகள் பாடியுள்ளார். அப் பதிகம், அடிகள் ஒடுக்கமுற்ற திருவாமாத்தூர்க்கு வாய்த்தது. அதிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் 1006.
சதகம்
கற்றோர் விரும்பும் அகப்பொருள் மேலாவது, புறப் பொருள் மேலாவது, நூறு பாடல்கள் பாடுவது 'சதகம்' என்னும் பெயர்பெறும். சதகம் என்பது ‘நூறு' எனவும் பெயர் பெறும். "விழையும் ஒருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப.
(இலக்கண விளக்கம் பாட்டியல். 87)