268
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
சிலேடை வெண்பா (இரட்டுறல் வெண்பா)
சிலேடை (இரட்டுறல்) இருபொருள்பட வருதல். சிலேடை யமைய இயற்றப்பெற்ற வெண்பாக்களால் அமைந்த நூல் சிலேடை வெண்பா எனப்பெறும். சிலேடை வெண்பாக்களின் முன் இரண்டடிகளும் சிலேடையாகவும், பின் இரண்டு அடி களும் மடக்காகவும் அமையும்; ஊர்ப் பெயரால் சிலேடை வெண்பாப் பாடப்பெறுதலால் அவ்வூர்ப் பெயருடன் சிலேடை வெண்பா என்பதும் சேர்ந்து வழங்கும். தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவரால் இயற்றப் பெற்ற ‘கலைசைச் சிலேடை வெண்பா, நமச்சிவாய கவிராயரால் இயற்றப்பெற்ற ‘சிங்கைச் சிலேடை வெண்பா' ஆகியவற்றைக் காண்க சிலேடை வெண்பா நூறு பாக்களைக் கொண்டதாகும்.
சிறு காப்பியம்
ஆ
பெருங்காப்பிய உறுப்புகளில் சில குறைந்து வரினும், அறம்முதல் நான்கு பொருள்களில் குறைந்து வரினும் அது சிறுகாப்பியம் என்று கூறப்படும். காப்பிய நெறியில் சில குறைந்து வருமாயினும் காப்பியமே என்றும், அறமுதல் நான்கு வருமாயினும் காப்பியமே என்றும், அறமுதல் நான்கு பொருள் களில் குறைவுபட்டு வருவதே சிறுகாப்பியம் என்றும் கூறுவார்
தண்டியாசிரியர்.
"அறமுதல் நான்கினும் குறைபாடுடையது காப்பிய மென்று கருதப்படுமே”
(தண்டி. 10)
காப்பியம் காண்க.
சின்னப்பூ
ஆகும்.
அரசனது சின்னங்களை விரித்துக்கூறுவது சின்னப்பூ
நேரிசை வெண்பாவால் அரசனது சின்னங்கள் ஆகிய தசாங்கத்தினைச் சிறப்பித்து நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் தொகைவரப் பாடப் பெறுவது அது. தசாங்கங்கள் மலை, ஆறு, நாடு, ஊர், பரி, களிறு, கொடி, முரசு, தார், பெயர் என்பன.