உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2 ஓ

நிலையுரைப்பதாகக் கூறுவது தூது ஆகும். ஆடவர் மகளிர் இருவர் வாக்காகவும் தூது நூல் கூறப் பெறுதல் உண்டு.

6

பயில்தரும் கலிவெண் பாவி னாலே

உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தின் விடுத்தல் முந்துறு தூதெனப்

பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே.

وو

(இலக்கண விளக்கம் பாட்டியல். 114) தூதுவிடுதற்குரியவை இவை என்பதைப் பத்தென வரைப் படுத்திக் கூறியவர்கள் உளர். ஆனால் அவ்வரையறை கடந்து எண்ணிலாப் பொருட்பெயரால் தூது நூல்கள் உளவாதல் கண்கூடு.

66

66

66

எகினமயில் கிள்ளை எழிலியொடு பூவை

சகிகுயில் நெஞ் சந்தென்றல் வண்டு - தொகைபத்தை வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டான் பூறிவா வென்ற தூது.

இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுயில் பேதைநெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே தூதுரைத்து வாங்குந் தொடை.

ஆணும் பெண்ணும் அவரவர் காதல் பாணன் முதலிய உயர்திணை யோடும் கிள்ளை முதலிய அஃறிணை யோடும் சொல்லித் தூது போய்வா வென்னக் கலிவெண் பாவால் அறைவது தூது.”

தெம்பாங்கு

(பிரபந்தத் திரட்டு)

(இரத்தினச் சுருக்கம்)

(முத்துவீரியம். 1112)

ஈரடி ஓரெதுகையாய், நாற்சீரடியாய், ஒவ்வொரடியின் மூன்றாம் சீரும், முதற்சீருக்கேற்ற மோனையுடையதாய் வரும்