உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

66

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

கற்போலும் நெஞ்சம் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙனம் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ.’

நகர் விருத்தம் (நகர்ப்பா)

நகர நலங்குறித்துப் பத்து ஆசிரிய விருத்தம் பாடுவது நகர்விருத்தம் என்னும் சிறுநூற் பாற்படும்.

நட்சத்திரமாலை (உடுமாலை)

- (நவநீதப் பாட்டியல். 41)

உடுவின் பெயர் ஒவ்வொன்றும் வருமாறு இனிய பாடல் இருபத்தேழு இயற்றித் தொடுத்தல் நட்சத்திரமாலை எனப் படும். உடுவின் எண்ணிக்கை 27 ஆகலின், இந்நூற் பாடல் தொகையும் 27 ஆயிற்று.

“உடுப்பேர்க் கார்த்திருத்தல் சந்தமேற்ற நட்சத்ர மாலையே.

66

‘தாரகைமாலை” பார்க்க.

- (பிரபந்தத்திரட்டு. 26)

நடுவொலிலயந்தாதி

‘ஒலியந்தாதி' பார்க்க.

நதிவிசேடம் (ஆற்றுச் சிறப்பு)

தலைவன் நாட்டின் ஆற்றினைச் சிறப்பித்து, மற்றை ஆறுகளின் இயலை இகழ்ந்து காமுகர் கூடும் குறியிடத்திற்கு ஆற்றில் அடித்துவரப்படும் மலருக்கு உவமையாக்கிக் கூறுதல் ஆற்றுச்சீர் என்னும் நதிவிசேடமாம்.

66

இறைவன் நதியை எடுத்துமற்ற வற்றைக் குறியிகழ்ந்து காமக்குணத்தார் - குறியிடத்துக்

காற்று மலரையுவ மானித்தல் எந்நாளும் ஆற்ற நதிவிசே டம்.

99

(பிரபந்தத்திரட்டு 66)

காற்றுக்கும் மலருக்கும் உவமையாக்கிக் கூறுதலுமாம்.

நயனப்பத்து (திருக்கண்பத்து)

ஆசிரிய விருத்தம் பத்தினாலாவது, கலித்துறை பத்தினா லாவது, நயனத்தைப் புகழ்வது நயனப்பத்தாகும். (நயனம் - கண்.) . (நவநீத. 50)