உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

சுவைக்கு ஒன்பதாக ஒன்பான் சுவைக்கும் எண்பத்தொரு பாடல்பாடுதல் நவரச மஞ்சரி எனப்பெயர் பெறும்.

வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளின் திருச்செந்தில் ‘நவரச மஞ்சரி' இவ்வகையில் எழுந்ததாம்.

நவமணி (தொண்மணி)

ஒன்பான் மணிகளின் பொயரும் அமைய, ஒன்பான் பாடல்கள் இயற்றல் நவமணியாம்.

விருதை சிவஞானயோகிகள் இயற்றிய ஒரு நூல், 'சேறை நவமணிமாலை' என்பது. தொண் -ஒன்பது.

நவமணிமாலை (தொண்மணிமாலை )

வண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமும் ஒன்பது வர அந்தாதியாகப் பாடுதல் நவமணிமாலை எனப் பெறும். நவரத்தினமாலை என்பதும் இது. ஒன்பது பாடல் களிலும் ஒன்பது மணிப்பெயர்கள் வரும்.

66

66

வெண்பா முதலா வேறோர் ஒன்பது நண்பர்க் கூறல் நவமணி மாலை'

(இலக்கண விளக்கம் பாட்டியல். 76)

“ பாவே இனமே என்றிவை இரண்டும் மேவிய வகையது நவமணி மாலை.

- (பன்னிருப் பாட்டியல். 294)

“ஆசிரிய விருத்தம் ஒன்பது வருவது நவமணிமாலை.

என்று நவநீதப்பாட்டியல் (52) கூறும்.

99

66

அந்தா தித்து வெண்பா ஆதிய

பாவும் பாவினமு மாக ஒன்பது

செய்யுள் அணிபெறச் செப்புவ ததுதான்

நவமணி மாலையாம் நாடுங் காலே.

(முத்துவீரியம். 1051)

இவ்விலக்கணம் அமையப் பாரதியாரால் செய்யப்பெற்ற பாரதமாதா நவரத்தினமாலை புது நெறியினதாகும்.