உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

இளங்குமரனார் தமிழ் வளம் - 2 நாமாவளி (திருப்பெயர் வரிசை)

2

நாமம் - பெயர்; ஆவளி - வரிசை; விளக்கணி, ‘தீபாவளி'

எனப்படுதல் அறிக.

இறைவன் திருப்பெயர்களைப்

பலப

வுரைத்து

வாழ்த்துதலும், வேண்டிக் கிடத்தலும், நாமாவளியாம்.

66

அம்பலத் தரசே அருமருந்தே

ஆனந்தத் தேனே அருள்விருந்தே

பொதுநடத் தரசே புண்ணியனே

புலவ ரெலாம்புகழ் கண்ணியனே."

எனத் தொடங்கும் வள்ளலார் ‘நாமாவளி’

66

நல்லோரெல் லார்க்கும் சபாபதியே நல்வர மீயும் தயாநிதியே."

என அருள்விளக்கம் செய்து,

66

புத்தந்தரும் போதா வித்தந்தரும் தாதா நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா.”

என வேண்டி நிறைகின்றது.

அடியார் திருக்கூட்டத்து ஆர்வ இசையால் கொட் டாட்டுப் பாட்டாகத் திகழும் வண்ணம் பல்வேறு இசை வண்ணம் திகழப் பாடப்பட்டுள்ளதாம்.

‘கொட்டாட்டுப்பாட்டு' (வாத்யநிருத்த கீதம்) என்பது கல்வெட்டில் கண்ட அருந்தொடர்.

நாழிகைக் கவி

அரசர்க்கும், அமரர்க்கும் உரைக்கும் கடிகைகளை, முப் பத்திரண்டு வெண்பாவினால் உரைப்பது நாழிகைக் கவியாகும். இது நாழிகை வெண்பா, கடிகை வெண்பா எனவும் பெறும்.

66

வானவர்க்கும்,

அரசர் தமக்கும் அறிய உரைத்த கடிகைகளை

உரைசெய்யுள் முப்பத்திரண்டு வெண்பாவென ஓதுவரே.”

- (நவநீதப் பாட்டியல். 54)