306
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
என்று அமைவது புறத்துறை. இதில் ‘இன்னது செய்வேன்' என்னும் அளவே யுள்ளது.
காமம், கோவம், உலோபம், மோகம், மதம், ஆணவம் என்னும் அறுகுணக்கேடுகளையே பகையாய்ச் சுட்டி, அவற்றை வெட்டியழிப்பதாம் உண்மையுடன் முழுப்பதிகமும் அமைந்
துள்ளது.
நொச்சிமாலை
புறத்து ஊன்றி பகைவர் கொள்ளாமல், நொச்சிப் பூமாலை சூடித் தன் மதில்காக்கும் திறம் கூறுவது நொச்சி மாலையாகும்.
66
ப
“ கோலிய மாற்றார் கோட லின்றி
நொச்சிவேய்ந் தகல்எயில் நோக்குந் திறனை வழுத்துதல் நொச்சி மாலையாகும்.
நொண்டிச்சிந்து
(முத்துவீரியம். 1075)
நொண்டி நாடகங்களுக்கு அமைந்த சிந்து வகையே நொண்டிச்சிந்து எனப்பட்ட தாகலாம். அச்சிந்து, அந்நாடகம் தவிர்த்துப் பிறவற்றுக்கும் பயன்படுத்தப்பட்ட போது அப் பயரைக்கொண்டு வழங்கப்பட்டிருத்தல் கூடும்.
நொண்டிச்சிந்து பெருவழக்குடையது. 'சித்தராரூட நொண்டிச் சிந்து' என்பதொரு நூல் பாம்புகளின் இயல்பு, அவற்றின் வகை, பெயர்கள், பற்களின் பெயர்கள், அவற்றின் தன்மை, நஞ்சினை இறக்கும் வழி ஆகியவற்றையெல்லாம் மிக விரித்துரைக்கின்றது.
66
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சியஞ் சிச்சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே.”
என்பது நொண்டிச்சிந்தே.
பாதி ஓரடி (மேலடி) குறைந்தும், மீதிப்பாதி ஓரடி (கீழடி) நீண்டும் இருக்கவில்லையா! பாட்டின் அடி அளவே நொண்டிக் கொண்டுவிட்டதல்லவா! நொண்டி நடப்பவர் அடிநெடுமை