308
இளங்குமரனார் தமிழ் வளம் - 2 2
சாரியரால் இயற்றப்பட்ட அது, தொண்ணூற்றைந்து கண்ணி களால் நடக்கின்றது.
பஃறொடை வெண்பா ஐந்தடிமுதல் பன்னீரடி உயர் எல்லையினது என்பதைக் கடந்து கலிவெண்பாவைபோல நீண்டு வளர்ந்த குறிப்பை இதனால் அறியலாம்.
பகுபடுபாட்டு
ஒருபாட்டு
அதே
இனப்பாட்டாகவோ,
அவ்வகைப்பாக்களால்
வேறினப்
பாட்டாகவோ, மூன்றுக்கு மேற்பகுக்கப்படுமாறு அமையுமானால் அது 'பகுபடு பாட்டு' எனப்படும். அவ்வகைப் பாக்களால் அமைந்த நூலும் ‘பகுபடு பாட்டு' எனப்படும். ஒரு பாட்டு, ஐந்து பாட்டாக அமைந்த நூல் பகுபடு பஞ்சகம் என்று வழங்கப்பெறும்.
66
சிவகந்தன் சீர்மயின் மேற்றிகழ் செய்யும் தினம தொன்றி வைகண்டஞ் சூழினன் றானமின் விஞ்சொண்
ணகையிதென்னென் கவலொன்றுங் காலவற் குட்கதி ரெண்முக் கணிறை யெஞ்சே யவனங்கங் காணதென் றானரி வந்தித் தன னெழுந்தே.
என்னும் இக்கட்டளைக் கலித்துறையை, அறுசிர்க்கழி நெடில் ஆசிரிய விருத்தத்தில் இருவகையாகவும், தரவு கொச்சகக் கலிப்பாவாகவும், கலிநிலைத் துறையாகவும் காட்டப்பெற்றுள் ளதைப் பத்துப் பிரபந்தத்துள் காண்க.
பஞ்சகம் (ஐந்தகம்)
- (ஐந்தாதி என்னும் பகுபடுபஞ்சகம். 1)
ஐந்து பாடல்களைக் கொண்டதொரு சிற்றிலக்கியம் பஞ்சகம் எனப்படுகின்றது.
விருத்தம், வெண்பா, தாழிசை, சிந்து முதலாய பல வகை களில் பஞ்சகம் காண வருதலால் ஐந்து பாடல்கள் என்றே முடிவே செய்யலாம்.
இனி ஐந்து பொருள்களைப் பற்றித் தனித்தனி ஒரு பாட லால் பாடுதலும் பஞ்சகம் என்பது, தண்டபாணி அடிகள் பாடிய ‘ஐம்படை மாலை’யால் அறியலாம்.