310
படைப்போர்
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
நபிகள் நாயகம் பங்கு கொண்ட போர்கள் தொடர்பாக எழுந்த இவ்விலக்கிய வகை, பின்னே சமயப்போர் தொடர்பாக வளர்ச்சியுற்றது.
ப
படைப்போர்களில் இறவுசுல்கூல் படைப்போர் புகழ் மிக்கது. காப்பிய இயலாய் இயல்வது. ஐந்து போர்களைப் பற்றித் தொடர்ந்துரைக்கும் படைப்போர் ஐந்து படைப்போர் என்பது. படைப்போர் கண்ணிகளால் அமைந்தது.
இசுலாமியக் கொடை யாக எழுந்தது ‘படைப்போர்’ இலக்கியம். 'சண்டை - பார்க்க.
படைவீட்டுப் பதிகம்
‘படை' என்பது 'கருவி' என்னும் பொருளது. கலப்பை ‘உழுபடை' என்றும், அது செல்லும் சால். ‘படைச்சால்’ என்றும் வழக்கிலுள்ளதை அறிந்தால் 'பொதுவில் கருவிப் பொருளதே ‘படை’ என அறியலாம். எனினும் ‘படை', போர்க் கருவிகளைக் குறித்தலே பெரு வழக்காயிற்று. படைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ள சாலை, ‘படைக்கலக் கொட்டில்' என்று பண்டு வழங்கப்பட்டது. ‘ஆயுதசாலை’ என்னும் வழக்கு வரு முன்னே தமிழ் வழக்கில் இருந்தது, படைக்கலக் கொட்டிலே. படை வழிபாடே, ஆயுதபூசைக்கு முன்னோடி.
இனிப் படைக்கலம் என்பதும் தன் பொதுமை நிலையில் இருந்து 'வேல்' என்பதைக் குறிக்கும் நிலையுண்டாயிற்று. போரில் சிறந்த போர் யானைப்போர்; முயலை எய்ய அம்பும், யானையை வீழ்த்த வேலும் வீரர் கொள்வர். ஆகலின் “கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என வள்ளுவம் பேசிற்று. (குறள் 772)
வேல், வீரன் கையதாம் கருவி. வீரருள் தலையாய வீர னாகச் செவ்வேள் மதிக்கப்பட்டான்; அவனே வேந்தனாகவும், இறைவனாகவும் கொள்ளப்பட்டான். அவன் கை 'வேற்படை மெய்வழிபாட்டுக்கு உரியதாயிற்று. வழிபாட்டுக்காகப் படை நிறுத்தப்பட்ட இடமே ‘படை வீடு' எனப்பட்டது. 'படை வழிபாடே, முருக வழி பாடகாவும் இணைந்த வழிபாடாகவும் இயலாயிற்று. 'படைவீடு' என்பதற்கு விளக்கச் செய்தியே இது.