328
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
இ வ்வகையில் எழுந்தநூல், 'சிவஞான பாலய தேசிகர் பாடாண்பாட்டு' என்பதாகும். இது நேரிசை ஆசிரியப்பாவாய்
608
அடிகளில் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர்
ஆத்திரேயன் சீனிவாசன் என்பார்.
66
வித்தகர் இயற்கை வெட்சிமுதல் எட்டொடும்
அவர்சித் தாந்தம் அமைவுறக் காட்டிப்
பாடாண் பாட்டெனப் பகர்ந்தனன்.
எனவரும் பாயிரத்தால் பாடாண்பாட்டின் இலக்கணம் இன்ன தென ஆசிரியர் சொல்கிறார்.
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய வற்றில் பாடாண்திணைச் செய்தியுண்டு. புறநானூறு பாடாண் பாடல் பலவற்றையுடையது.
66
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று.”
எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை (189 ‘பாடாண்' பொருள் விளக்கும்.
பாவை
பாவையன்ன கன்னிப்பெண்கள் நன்மழை பொழிந்து நாடு செழிக்கவும், வீடும் குடியும் விளங்கவும், காதற் கணவனை எய்திக் கவினவும் நோன்பு கொண்டு, தம்மன்ன பாவையரையும் எழுப்பிச் சென்று பாவையுருச் செய்து வழிபட்டு நீராடுவதாக அமைவது ‘பாவை’ என்னும் நூல்வகைச் செய்தியாம்.
ப
வெண்டளையான் இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா வாற் பாவைப்பாட்டு வரும் என்பதை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை யானும், ஆண்டாளம்மையார் அருளிய திருப் பாவையானும் அறிக. திருவெம்பாவை 20 பாடல்களாலும், திருப்பாவை 30 பாடல்களாலும் அமைந்தனவாம். ஒவ்வொரு பாட்டும் ‘எம்பாவாய்' என்னும் நிறைநிலை எய்தும்.
66
“ கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை