இலக்கியக்கியனகரதிகராதி
பிறிதுபடுபாட்டு
335
ஒரு பாட்டினுள் வேறு இனப்பாட்டு ஒன்றோ, பலவோ அமையும் வண்ணம் பாடுவது பிறிதுபடுபாட்டாகும். தன்னினப் பாட்டும், வேறினப்பாட்டும் ஒரு பாட்டுள் அடங்கி வரப் பாடினும் பிறிதுபடு பாட்டேயாம். இவ்வகைப் பாடல்களால் வரும் நூல் 'பிறிதுபடு பாட்டு' என்பதாம்.
66
66
கட்டளைக்கலித்துறை
ஓமய வேலவ னோய்வறு சீர்த்திய னோமவுன சீமய சுத்தமர் நாதன் மயின்மிசைச் செல்லிளைஞன் கோமய மின்னிய வீடேறு மிட்டர் குரவனென தாமய வீறிறு மாறன கானந்த மார்கவன்றே.
நேரிசையாசிரியப்பா
ஓமய வேலவ னோய்வது சீர்த்திய
னோமவு னசிமய வுத்தமர் நாதன்
மயின்மிசைச் செல்லிளை ஞன்கோ மயமின்
னியவீ டேறு மிட்டர் குரவ
னெனதா மயவீ றிறுமா
றனகா னந்த மார்க வன்றே."
(பிறிதுபடுப்பாட்டுப்பிரபந்தம். 1)
பிறிதுபடு பாட்டு இரண்டு பாட்டாகப் பகுக்கப்படுமானால் பிறிதுபடு இருபங்கி (துவிதபங்கி) என்றும், மூன்றாகப் பகுக்கப் படுமானால் பிறிதுபடு முப்பங்கி (திரிபங்கி) என்றும் வழங்கப் பெறும். குமரகுருதாசர் இயற்றிய பத்துப் பிரபந்தங்கள் என்னும் நூல் காண்க.
புகழ்ச்சி மாலை
பலவகை அடிகளும் மயங்கிய வஞ்சிப் பாவால் மகளிரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி மாலையாகும்.
66
மயக்க அடிபெறு வஞ்சிப் பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல் புகழ்ச்சி மாலை.
—
(இலக்கண. பாட்டியல். 106)