உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

337

பாடப்பெறாக் கோயில் புகழிலாக் கோயில்" என்ற தவிப்பும் ருந்தது என்பது அவர் வரலாற்றால் விளங்குகின்றது.

திருக்கருவைத் தலைபுராணம் காப்பு, பாயிரம், வணக்கம் அவைய க்கம் என்பவை 49 பாடல்களைக் கொண்டுளது. பின்னர்த் திருநாட்டுச் சருக்கம், திருநகர்ச் சருக்கம், தல விசேடச் சருக்கம், தீர்த்தவிசேடச் சருக்கம், மூர்த்திவிசேடச் சருக்கம், புராணக்கதை வரலாறு எனக்கூறி, முதலாவது கதை காக புசுண்டர் கதியடைந்த சருக்கம் முதலாக முப்பத்தைந்தாவது சேரவரதுங்கர் தெரிசனம் பெறு சருக்கம் ஈறாக வளர்கின்றது. புராணநூல் அமைப்பின் ஒரு பொதுப்போக்கு இதனால் புலப்படும்.

புலம்பல்

'புலம்பே தனிமை' என்றார் தொல்காப்பியர். புரப் பாரையோ, அன்புப்பிறப்பாரையோ இழந்த காலையில் தனிமைப் பட்டுப்போன உணர்வும், அவ்வுணர்வால் புலம்பு தலும் உண்டாம்.

உலகியல் புலப்பம் வேறு; தூய துறவு நிலைப்படியேறித் துலங்கும் சான்றோர் ‘புலப்பம்' வேறு; அவர்கள் இறையைப் பிரிந்து தனித்திருத்தலுக்கும், உயிர்களின் மேல் கொண்ட பேரருள் உருக்குதலுக்கும் புலம்பினர். முன்னது கலங்கல் என்றும், கையறு நிலையென்றும், ஒப்பாரி என்றும் பெயர் களைத் தாங்க, பின்னது புலம்பலாகவும், ஆற்றாமையாகவும், ஏசறவாகவும், பிறவாகவும் விளங்குகின்றன. சித்தர்களுள் ஒருவர் அழுகணிச் சித்தர்; அழுகண்ணராகவே இருந்தவர் எவ்வளவு ஆற்றாது புலம்பியிருப்பார். பட்டினத்தார் புலம்பலும், பத்திர கிரியார் புலம்பலும், அறிவுப் புலம்பல் (ஞானப்புலம்பல்), மெய்யறிவுப் புலம்பல் (மெஞ்ஞானப் புலம்பல்) ஆம்.

மணிவாசகரின் திருவேசறவு; திருப்புலம்பல், வள்ளலா ரின் ஆற்றா இரக்கம், ஏழைமையின் இரங்கல், ஆற்றாப் புலம்பல், முறையீடு இவையெல்லாம் உருக்கத்தால் பிறந்து உருக்கவே உருக்கொண்டவை அல்லவோ?

மைந்தன் கான் புகுந்தான்; தந்தை வருந்தி வான் புகுந்தான்! ஏன் புகுந்து புலம்புகிறார் குலசேகர ஆழ்வார்! தசரதனே ஆகிவிட்டாரே?