346
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
பத்தாநா ளைப்பவனி பாவைபிரி வே; வணிக வத்தருக்கா காமஞ் சரி.
—
(பிரபந்தத்திரட்டு 34)
பாடற் சொல்லமைதி நல்விளக்கமாக அமையாமையின் பிற வாறு பொருள் காணவும் வாய்க்கும்.
மடல்
அறம், பொருள், வீடு, என்னும் மூன்று பொருள்களையும் பழித்து, மங்கையரைச் சேர்தலான் உளவாகிய இன்பத்தையே பயனெனக்கொண்டு இன்னிசைக் கலி வெண்பாவால் தலைவன் இயற்பெயர் எதுகையில், அப்பொருள் முழுவதும் பாடுதல் மடல் எனப்படும்; இஃது இன்பமடல், வளமடல் என்றும் கூறப்பெறும்.
66
66
அறம்பொருள் வீடெனு மம்முக் கூற்றின் திறங்கடிந் தரிவையர் திறத்துறும் இன்பம் பயனெனக் கலிவெண் பாவால் தலைவன் பெயரெது கையினிற் பேசுதல் வளமடல்.
(இலக்கண விளக்கம் பாட்டியல். 96)
அறம்பொருள் வீடு திறம்பெரி தழித்துச் சிறந்த வேட்கை செவ்விதிற் பராஅய்ப்
பாட்டுடைத் தலைவன் இயற்பெயர்க் கெதுகை
நாட்டிய வெண்கலிப் பாவ தாகித்
தனிச்சொல் ஒரீஇத் தனியிடத் தொருத்தியைக்
கண்டபின் அந்த ஒண்டொடி எய்தலும்
மற்றவள் வடிவை உற்றகிழி எழுதிக் காமங் கவற்றல் கரும்பனை மடல்மா ஏறுதல் கவற்றல் கரும்பனை மடல்மா ஏறுதல் ஆடவர் என்றனர் புலவர்.
99
(பன்னிருப் பாட்டியல். 246)
மடல் என்பது பனையின் கருக்கோடு கூடிய மட்டை. அதனால் குதிரை வடிவுசெய்து அதன்மேல் ஆடவர் ஏறி யிருந்து ஊர்வதாகக் கூறுதல் மடல் என்னும் நூலாயிற்று. அவர் எருக்குமாலை சூடுவர்.