இலக்கிய வகை அகராதி
353
நுண்
முதலிய சொல்லணிகளும் அமைய 33 செய்யுட்கள் இயற்றி மாலைமாற்றுமாலை எனப்பெயர் சூட்டியுள்ளார். ணுணர்வினர்க்கே அமைந்த படைப்பு இஃதாகும். திருஞான சம்பந்தர் திருப்பிரமபுரப் பதிகம் ஒன்றை மாலைமாற்று மாலையாகப் பாடியுள்ளார். அதற்குத் 'திருமாலைமாற்று என்பது பெயர்.
(எ-டு)
66
‘வாலகன மானீயா மாவல வேனித நீலன நேசாயா நீயல - மாலய
னீயாசா னேநல னீதனி வேலவ மாயானீ மானகல வா.
மானதவம்
(மாலைமாற்று மாலை 1)
அகன்ற மலைக்கானில், அழுத்தமான தவமியற்றி, அத் தவத்தால் நங்கை ஒருத்தியை வருவித்துத் தருவது பற்றிக் கூறுவது 'மானதவம்' என்றும் நூல்வகைச் செய்தியாம்.
மானம் - பெருமை.
66
விட்டவறைக், கானந் தரிபூசை யாலழைத்து மாலரிவை தானுதவல் மான தவம்.”
―
- (பிரபந்தத்திரட்டு)
முதுகாஞ்சி
ளமை கழிந்த அறிவின் மிக்கோர், இளமைகழியாத அறிவில்லாத மாக்கட்குக் கூறுவது முதுகாஞ்சியாகும்.
66
இளமைகழிந் தறிவு மிக்கோர் இளமை
கழியாத அறிவின் மாக்கள் தமக்கு
மொழியப் படுவது முதுகாஞ்சி யாகும்."
காஞ்சி - நிலையாமை.
―
(முத்துவீரியம். 1127)
வ்வுலகியலைக் கூறும் தொல்காப்பியம்,