66
இலக்கிய வகை அகராதி
அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்
பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறா
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும்.”
359
(பன்னிருப் பாட்டியல். 346)
னி அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபா என்னும் ஐவகைப்பாவாலும் மேற்கணக்குத் தொகுக்கப்படும் என்றும்
கூறுவர்.
66
ஐம்பது முதலா ஐந்நூ றீறா
ஐவகைப் பாவும் பொருள்நெறி மரபிற் றொகுக்கப் படுவது மேற்கணக்காகும்.
وو
(பன்னிருப் பாட்டியல். 346)
கீழ்க்கணக்கு பதினெட்டாதல் போல மேற்கணக்கும் பதி னெட்டாம். அவை பாட்டு தொகை என்பன.
பாட்டாவது பத்துப்பாட்டு; தொகையாவது எட்டுத்
தொகை.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு
பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் என்பவை பத்துப்பாட்டு.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை எட்டுத்தொகை.
இப்பாட்டும் தொகையும் பதினெண்மேற்கணக்கு என்றும், மேற்கணக்கு என்றும் வழங்கப்படுகின்றன.
மொழிமாற்று
மொழிகளை மாற்றிக் கூட்டிப்பொருள் வைக்கும் மிறைக்கவி மொழி மாற்றாகும்.
66
உரித்தது பாம்பை உடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை எரித்த தொராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
காள்ள