வண்ணம்
இலக்கிய வகை அகராதி
363
வண்ணமாவது வண்ணித்துப் பாடப்படும் பாடல். அஃது
இசைப்பாடல்.
அதன்
என
வண்ணம் தொல்காப்பியனாரால் சுட்டப்படுகின்றது. வகைகளும் பாஅவண்ணம், தாஅவண்ணம் எண்ணப்படுகின்றது. ஒலிநயம் கருதிய அமைப்பு வண்ணம் என்பது வெளிப்படத் திகழ்கின்றது. கலிப்பாவின் உறுப்பான 'வண்ணகமும்' இவ்வகைப் பட்டதே. கம்பர் பாடல்களிலும் வண்ணம் உண்டு. கம்பன் பாடிய வண்ணம் 96 என்பதொரு வழக்கு.
ஆயிரத்துக்கு மேலும் வண்ணம் இசைத்த வளமார்ந்த பாவலர் அருணகிரியார். அவர்க்கு முன்னே வண்ண இசையில் கொடி கட்டிப் பறந்தவர் ஆளுடையபிள்ளை யாராம் தமிழ் ஞானசம்பந்தர்; பின்னே வண்ண இசையில் பேருலாப் போந்தவர் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள்; பட்டினத் தாரின் உடற்கூற்று வண்ணம் உலகறிந்தது.
இசுலாமியப் புலவர்கள் சிலரும் வண்ணம் பாடுதலில் ணையற்றுத் திகழ்ந்தனர் என்பதற்குச் சான்று பாட்சாப் புலவர் இயற்றிய வண்ணங்கள், வண்ணக்குழிப்புகள் என்னும் நூல்.
அகப்பொருள் நுவல்வதாய் எழுந்த வண்ணம், மெய்ப் பொருள் கிளப்பதாகவும் திகழும். சில வண்ணங்களின் சந்தச் சுவைக்கு ஒவ்வாப் பொருளிழிவு அதன் பெருமையைக் குன்றச் செய்து விடுவதாகவும் உள்ளது.
வண்ணவிருத்தம்
ஓரடிக்குப் பதினாறு கலை வகுத்து, இப்படி நாலடிக்கும் அறுபத்துநாலு கலை வகுத்து, வண்ண விருத்தமாகப் பாடப் படுவது வண்ண விருத்தம். (நவநீதப் பாட்டியல். 31)
66
-
எட்டுக் கலையாய் இடையிட் டெதுகையாக்
கட்டுக் கலைக்குமுக் கண்ணியாத் - திட்டத்தில்
தொங்கலும் எட்டாய்த் தொடைமூன்று நான்காறாய்ப் பங்குபெறும் வண்ணப் பரப்பு.
(இலக்கண சூடாமணி) - (நவநீதப் பாட்டியல். 31 மேற்)
வண்ணம் பார்க்க.